உலகில், ஏகாதிபத்தியத்தின் தலைவனாக தலைமகனாக அமெரிக்கா தற்போது விளங்கி வருகிறது. பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள் அதன் ஊதுகுழல்களாக, எடுபிடிகளாகச் செயல்பட்டு வருகின்றன.
உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான சோவியத் ரஷ்யா சிதறுண்டு அது தனது வல்லாண்மையை இழந்த பிறகு, அடிமரிக்கா கேட்பாரற்ற ஒற்றை வல்லரசாக உருவெடுத்ததில் வியப்பு ஒன்றும் இல்லை.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை சோவியத் ரஷ்ணா, அமெரிக்காவிற்குச் சவால் விடும் வண்ணம் இராணுவ வலத்தில் மட்டுமின்றி, அனைத்துத் துறைகளிலும் சிறப்புற்று விளங்கியது. கியூபாவை அமெரிக்கா தாக்க முற்பட்டபோது, அன்றைய ரஷ்ய ஜனாதிபதி குருசேவின் எச்சரிக்கை காரணமாக அமெரிக்கா தனது முடிவிலிருந்து பின்வாங்க நேரிட்டது. வான்வெளிச் சாதனையில் நாங்கள் அமெரிக்காவிற்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை ரஷ்ய ஜனாதிபதி குருசேஷ் ஒரு முறை கிண்டலுடன் இவ்வாறு குறிப்பிட்டார். "Our Sputinic Says Peep..... Peep... All Over the World Except wash. Incton Where it laughs Haa..... Haa.. Haa.." அவையெல்லாம் பழங்கதையாய்ப் போய்விட்டன.
ஊருக்கு ஒரு நீதி ஆளுக்கு ஒரு நீதி
தனக்கு ஒரு நீதி பிற நாடுகளுக்கு ஒரு நீதி என்ற அமெரிக்காவின் நிலைப்பாடு ஒன்றும் புதிதானது அல்ல. சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானத்திலும் அமெரிக்கா லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவிதது வருகிறது. அதன் வெறி இன்னமும் அடங்கிய பாடில்லை.
அமெரிக்காவின் பூர்வ கதையைப் பார்த்தால் அக்கதையின் பக்கங்கள் முழுவதும் பச்சை இரத்தவாடையே வீசுகிறது. கொலம்பஸ் காலத்திலிருந்தே இந்தக் கோரத் தாக்குதல் தொடங்கி விட்டது. கி.பி.1494க்கும் 1506க்கும் இடைப்பட்ட இந்தப் 12 ஆண்டுகள் காலத்தில், சுமார் முப்பது லட்சத்திற்கும் மேற்பட்ட அந்நாட்டின் பூர்வீகக்குடி மக்களான செவ்விந்தியர்கள் கொல்லப்பட்டனர். நஞ்சூட்டப்பட்டும், தூக்கில் இடப்பட்டும், கூரிய ஈட்டிகளால் தாக்கப்பட்டும, நாய்களால் வேட்டையாடப்பட்டும் இம் மக்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவில், வெள்ளையர்கள், குடியேறியபோது, மிச்சமிருந்த பூர்விகக் குடிமக்களும், இராணுவத்தாலும் நில ஆக்கிரமிப்பாளர்களாலும் கொல்லப்பட்டனர். தவிரவும், அம்மை நோயைப் பரப்பும் கிருமிகள் கொண்ட போர்வைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு அதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் நோய்க்கு ஆளாகிப் பலியாயினர். பல்லாயிரக்கணக்கான பூர்வீக மக்கள் அவர்கள் உழுது பயிரிட்டு வாழ்ந்து வந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு கண் காணாத பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு சென்றவர்கள் குளிராலும், பட்டினியாலும் இறந்தனர். 1830 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் இராணுவத் தளபதியாக இருந்த வில்லியம் ஷெர்மான் என்பவர் அதிக எண்ணிக்கையிலான செவ்விந்தியர்களை இந்த ஆண்டு கொன்றுவிட்டால் , அடுத்த ஆண்டு நமது பணி எளிதாக இருக்கும் என்றார். இப்படி இலட்சக்கணக்கான மக்களை ஈவு இரக்கமின்றிக் கொன்று அவர்களின் சடலத்தின் மீது உருவான நாடு தான் இன்றைய உலக முதன்மை வல்லரசான அமெரிக்காவாகும். எனவே அமெரிக்காவின் ஆதிக்கவெறி, கொலை வெறி அதன் நாடி நரம்புகளிலேயே ஊடுருவியுள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
தன்னைத் தவிர தனது கூட்டாணிகளைத் தவிர வேறு யாரும் அணு ஆயுதங்கள் வைத்துக் கொள்ளக் கூடாது என்று உலக நாடுகளை மிரட்டிவரும் அமெரிக்காவில் தான் உலகின் மிகப்பெரிய அணு ஆயுதக் கிடங்கு உள்ளது. சாதாரணக் குடிமக்கள் மீது அணுகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்திய முதல் நாடும் அமெரிக்காதான். 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஆறாம் நாள் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி என்ற இரு நகரங்கள் மீது அமெரிக்கா விமானங்கள் அணு குண்டுகளை வீசின. இதன் காரணமாக,இந்த இரு நகரங்களிலும், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இத்தனைக்கும், இரண்டாம் உலகப்போர் அப்போது முடியும் தருவாயில் இருந்தது. ஏற்கனவே ஐரோப்பியப் போர்ப் பகுதிகளில் அச்சு நாடுகள் தோல்வியடைந்து விட்ட நிலையில் அந்நாடுகளின் ஆசியக் கூட்டாளியான ஜப்பானை அணுகுண்டு போட்டுத்தான் பணிய வைக்க வேண்டும் என்ற நிலை அப்போது இல்லை. எனினும் அமெரிக்கா தான் செய்து வைத்திருந்த அணுகுண்டுகளைப் பரிசோதித்துப் பார்க்க முடிவு செய்தது. அதற்கான களம்? நியாயமாகப் பார்த்தால் சோதனை செய்து பாக்க வேண்டிய இடம் ஜெர்மனிதான். ஆனால் ஜெர்மனியில் குண்டுகளைப் போட்டு சோதனையில் ஈடுபட்டால் அது தனது கூட்டாளிகளான பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளைப் பாதிக்கும். எனவே அந்நாட்டை விட்டு விட்டு தூரகிழக்கு நாடான ஜப்பானில் குண்டு வீசினால் ஐரோப்பா தப்பித்துக் கொள்ளும். பரிசோதித்தும் பார்த்தாற்போலும் ஆயிற்று என்று அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமனுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. எனவே ஜப்பானிய நகரங்களின் மீது குண்டுகள் வீசப்பட்டன. குண்டு வீச்சின் போர விளைவுகளை ஜப்பானிய நகரங்கள் இன்றைக்கும் அனுபவித்து வருகின்றன. எனவே அணு குண்டுகளைத் தவறான முறையில் பயன்படுத்திய முதல்நாடு அமெரிக்காதான் (இன்று வரை, கடைசி நாடும் அதுதான். வேறு யாரும் அற்குப் பின்னர் அணுகுண்டுகளைப் பயன்படுத்த வில்லை) இந்நிலையில் மற்ற நாடுகளிடம் அணுகுண்டுகள் இருந்ததால் அவர்கள் அதனைத் தவறான முறையில் பயன்படுத்துவார்கள் என்ற அமெரிக்காவின் கூற்று வஞ்சகத்தன்மை உடையதாகும்.
இஸ்ரேலுக்கு ஒரு நீதி ஈரானுக்கு ஒரு நீதி....
சின்னஞ்சிறிய நாடான இஸ்ரேல் அணுகுண்டு வைத்துள்ளது. அமெரிக்கா அதற்கான தொழில் நுட்பத்தை அந்நாட்டுக்கு வழங்கியது. ஆனால் ஈரான், ஆக்கப்பணிகளுக்கான அணுசோதனை நடத்தக்கூடாது என அமெரிக்கா பலவழிகளிலும் மிரட்டுகிறது. ஈரான் அணுகுண்டு தயாரித்து விடுமே என்ற பயம்தான் அதற்குக் காரணமாகும். ஈரான் ஒரு அணு ஆயுத நாடாக உருவாகி விட்டால் தனது தத்துப்பிளையான இஸ்ரேல் பாலஸ்தீன மக்களையும், பிற அரபு நாடுகளையும் மிரட்டுகின்ற தனது வல்லாண்மையைச் செலுத்துகின்ற நிலைக்குத் தடங்கல் ஏற்பட்டு விடும் என்ற அமெரிக்காவின் பயமே இதற்குக் காரணம். தனது தத்துப்பிள்ளையான இஸ்ரேலின் அடாவடித்தனமானச் செயல்களைப் பாதுகாக்கவே அமெரிக்கா ஈரானின் அணு சோதனை மயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
இரண்டு உலகப் போருக்குப்பின்,அமெரிக்காவின் இராணுவத் தாக்குதலுக்கு பெருமளவு இலக்காகி வரும் பகுதி மேற்கு ஆசியாதான். உலகத் தேவையின் மூன்றில் இரண்டு பங்கு எண்ணெய் வளம் இந்தப் பகுதியல் இருப்பதால், அமெரிக்கா வித்துப் பிடித்து இந்தப் பகுதியையே சுற்றி வருகிறது. அமெரிக்க நாட்டின் வாகனங்களும், கனரக எஞ்சின்களும் இயங்கிக் கொண்டிருப்பது இந்த எண்ணெயினால்தான், உலகின் எண்ணெய் வளத்தை யார் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாரோ, அவர்தான் உலகச் சந்தையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். இந்த எண்ணெய் வளம் சவூதி அரேபியா, குவைத், ஈராக், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பெருமளவு எண்ணெய்யை அமெரிக்காவே பயன்படுத்தி வருகிறது. அதுவும் மிகப் புறைந்த விலக்கு இதனாலேயே அமெரிக்கப் பொருளாதாரம் வளம் பெற்று்ளது. இந்த நிலையினைத் தக்க வைத்துக் கொள்ள வுண்டும் என்பதே அமெரிக்காவின் ஒரே குறிக்கோளாகும். எனவே மேற்கு ஆசியாவில் இருக்கும் அரபு நாடுகள் அரபு தேசியம் என்ற கோட்பாட்டின அடிப்டையில் ஒன்று சுர்ந்து விட்ால் அது தனது நலன்களுக்கு விரோதமாக அமைந்து விடக்கூடும் என அமெரிக்கா அஞ்சுகிறது.அரபு உலகத்தில் அமெரிக்காவின் வல்லாண்மைக்கு எதிராக யாரேனும் பேசவிட்டால் அவரை உடனடியாக ஒழித்துக் கட்டுவது அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளில் முதன்மையான ஒன்று. அப்படி அழிக்கப்பட்டவர்தான் ஒரு காலத்தில் அமெரிக்காவால் வளர்க்கபட்டு பின்னர் அந்நாட்டின் மோசமான எதிரியாக மாறிய ஈராக் அதிபர் சதாம் ஹுஸைன்.
1990 ஆம் ஆண்டு சதாம் ஹுஸைன் தனது, அண்டை நாடான குவைத்தை இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆக்கிரமித்த போது, அதைக் காரணம் காட்டி 1991 ஜனவரி மாதம் அமெரிக்கா பன்னாட்டுப் படைகளின் துணையுடன் ஈராக்கின் மீது போர் தொடுத்தது. அமெரிக்காவின் இந்த நாசகாரத் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான ஈராக் மக்கள் மடிந்தனர். போர் ஒரு மாதத்திற்குள் முடிவுக்கு வந்த போதிலும், அமெரிக்காவின் மறைமுகப் போர் பல ஆண்டுகள் ஈராக்கின் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடை என்ற பெயரில் உணவு, உடை, உயிர்காக்கும் மருந்துகள் அந்நாட்டுக்குக் கொண்டு செல்வது தடுக்கப்பட்டன. இதற்கு ஐ.நா சபையும் துணை நின்றது. உயிர்காக்கம் மருந்துகள் இல்லாமல் இந்தக் காலகட்டத்தில் மட்டும் ஐந்து லட்சம் ஈராக் குழந்தைகள் மடிந்தனர். பொருளாதாரத் தடைகள் பற்றியும், அதன் காரணமான குழந்தைகளின் உயிரிழப்பு பற்றியும் கருத்துத் தெரிவித்த அமெரிக்காவிற்கான ஐ.நா. தூதர் மேடலின் ஆல்பிரைட் அது ஒரு கடினமான முடிவுதான். இருந்தாலும் அடைந்த லாபத்தை எண்ணுப்போது கொடுத்த விலை சரி தான் என்று நினைக்கிறோம். என்றார். என்ன ஆணவமான வார்த்தைகள். எங்களுக்கு லாபம் தான் குறி என்பதை எவ்வளவு பட்டவர்த்தனமாப அவர் சொல்லிவிட்டார்.
மீண்டும் 2003 மார்ச்சில் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இப்போது சொன்ன காரணம், ஆரான் உயிரிக்கொல்லி இரசாயன ஆயுதங்களை வைத்துள்ளது. எனவே அவற்றை அழிக்கவே போரில் ஈடுபட்டோம் என்றது அமெரிக்கா. ஆனால், அமெரிக்காவால் ஒரு சிறு துருப்பு இரசாயன ஆயுதங்களைக் கூடப் போர் முடிவில் கைப்பற்ற முடியவில்லை.
ஈரானுடன் பத்து ஆண்டுகளுகு்கும் மலாக, ஈராக் போரில் ஈடுபட்டிருந்தபோது, அமெரிக்கா ஈராக்கின் சதாம் ஹுஸைனுக்கு ஆதரவாகச் செயல்பட்டது. ஏராளமான இரசாயன ஆயுதங்களையும், ஆந்திராக்ஸ்களையும், பலகோடி டாலர் நிதி உதவிகளையும் அப்போது அமெரிக்கா சதாம் ஹுசைனுக்கு வழங்கியது. இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தியே சதாம் ஹுஸைன் ஈரானுடன் போரிட்டார். தனக்கு எதிராகச் செயல்பட்டு வந்த “கு்ர்து“ இன மக்களைக் கொன்றார். ஆக, மிக மோசமான அட்டூழியங்களைச் செய்து வந்த சதாம் ஹுஸைனுக்கு இந்தக் காலகட்டத்தில் ஆதரவாக நின்றது அமெரிக்காதான்.
ஈராக்கின் மீது இரண்டாவது முறையாக அமெரிக்கா போர் தொடுக்க முடிவு செய்தபோது, அதற்கு பலத்த சந்தேகம் ஒன்று இருந்தது. தான் ஏற்கனவே வழங்கியிருந்த உயிர்க்கொல்லி இராசாயன ஆயுதங்கள் இன்னமும் சதாம் ஹுஸைனின் கைவசம் இருக்குமோ, அந்நாட்டின் மீது போர் தொடுத்தால், அவர் அந்த ஆயுதங்களை அமெரிக்கத் துருப்புகளுக்கு எதிராகப் பயன்படுத்துவாரோ என்ற சந்தேகமே அது. எனவே போர் தொடுக்குமுன், அந்த சந்தேகத்தை நிவர்த்தி செயய அமெரிக்கா விரும்பியத. தொடர்நது பல ஆயுத பரிசோதனை ஆய்வாளர்களை அனுப்பி, ஈராக்கில் இன்னமும் இரசாயன ஆயுதங்கள் உள்ளனவா என்று பார்த்து வரச்சொன்னது (எல்லாம் ஐ.நா.சபையின் ஆதரவுடன்தான்). அங்கு இரசாயன ஆயுதங்கள் ஒன்றும் இல்லை என்று ஆய்வாளர்கள் சொன்ன பிறகுதான் அமெரிக்கா போரில் ஈடுபட்டது. வெற்றியும் கண்டது. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
அமெரிக்காவின் இந்த கபட நாடகம் உலகம் அறிந்த ஒரு நகழ்ச்சிதான். இன்றைக்கு ஈராக்கில் அமெரிக்காவின் கைப்பாவை ஒருவரே ஜனாதிபதியாக இருக்கிறார். ஆப்பகானிஸ்தானத்திலும் இதே நிலைதான். “யூனோகால்” என்ற அமெரிக்க எண்ணெய் நிறுவனத்தில் அதிகாரியாப் பணியாற்றிய ஹமீது கர்சாயே இப்போதைய ஆப்கானிஸ்தானத்தின் ஜனாதிபதி. எனவே அமெரிக்காவின் குறிக்கோள்களும், திட்டங்களும் மிகத் தெளிவானவை. மேற்கு ஆசியாவில், தனக்கு ஒத்து ஊதுகின்ற, தனது நலன்களுக்கு ஊறு செய்யாத தலைவர்களே ஆட்சியல் இருக்க வேண்டும். என்பதே அது. சவூதி அரேபியா, குவைத், ஜோர்டான் ஆகிய நாடுகளின் மன்னர்கள் அமெதிக்காவின் மேலாண்மைக்குத் துணை போவதால் அவர்கள் அந்நாட்டின் செல்லப்பிள்ளைகளாக பாதுகாப்பாக உள்ளனர்.
பாலஸ்தீன மக்களின் போராட்டம்.
11.9.2001 பற்றிப் (அமெரிக்காவின் இரட்டைப் கோபுரங்கள் தகர்ப்பட்ட நாள்) பெரிதும் பேசுகிற அமெரிக்கா 11.9.1922 ஐ வதிகாயக மறந்து விட்டது. இந்த நாளில் தான் பிரிட்டிஷ் அரசு, அரபு நாடுகளின் ஆட்சேபனைகளையும் மீறி பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான நடு ஒன்றை உருவாக்குவதற்கான ஆணையினைப் பிறப்பித்தது. பிரிட்டிஷ் அரசின் இந்த முடிவற்கு எதிராக உலகெங்கிலுமிருந்து கண்டனக் குரல்கள் எழுந்தபோது அப்போதைய பிரிட்டிஷ் அரசின் வெளியுறவுத் துறை துணைச் செயலாளர் பால்ஃபேர் பிரபு “பாலஷ்தீனத்தில் தற்போது வாழ்ந்து வரும் மக்களைக் கலந்தாலோசித்து அவர்களின் விருப்பங்களை அறிந்து கொள்ளம் முறையினைப் பின்பற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஸியோனிசம் என்பது சரியோ, தவறோ, நல்லதோ, கெட்டதோ, அது பழமை வாங்ந்த பாரம்பரியங்களிலும் தற்காலத்தேவைகளிலும், தற்போது அந்தப் புராதனநாட்டில் வாழும் ஏழு லட்சம் அரபியர்களின் ஆகைகள் அல்லது தப்பெண்ணங்களை விட ஆடமான நம்பிக்கைகளில் வேரூன்றியது” என்றார். ஆரேபியர்களை விடவும், யூதர்கள் மேலானவர்கள். அவர்களின் நம்பிக்கை மேலானது என்பதை எவ்வளவு வெளிப்படையாக ஆணவமான அவர் கூறினார் என்று பாருங்கள். மேற்கத்திய நாடுகளின் இந்த கையை நெறிதவறிய எண்ணப்போக்கே இஸரேலின் அனைத்து விதமான மனிதாபிமானமற்ற கொடுஞ் செயல்களுக்கும் அந்நாடுகள் துணை போவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
14.5.1948ல் இஸ்ரேல் ஒரு தனி நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தப் பிரகடனம் வெளியான சில நிமிடங்களுக்குள்ளாகவே, அமெரிக்கா இஸ்ரேலை அங்கீகரித்தது. தொடர்ந்து அந்த நாட்டிற்கு இன்று வரை நிதி உதவியும் ஆயுத உதவியும் அளிதது வருகிறது. இஸ்ரேலைப் பாதுகாப்பது அமெரிக்க அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையின் ஒரு முக்கிய அம்சமாக விளங்கி வருகிறது. இஸ்ரேல், அரபு நாடுகளுடன் நடத்திய அனைத்துப் போர்களிலும் அமெரிக்கா அதனை ஆதரித்துள்ளது. பாலஸ்தீன் மக்களுக்கு எதிரான மனிதாபிமான மற்ற கோரத் தாக்குதலில் ஈடுபட்ட போதெல்லாம் அமெரிக்கா இஸ்ரேலைக் கண்டிக்கவில்லை. இஸ்ரேலைக் கண்டித்து ஐ.நா.பொதுச்சபையிலோ, பாதுகாப்புச்சபையிலோ தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதேல்லாம்,அமெரிக்கா தனது சிறப்பு அதிகாரமான “வீட்டோ” வைப் பயன்படுத்தி, அத்தீர்மானங்களைத் தோற்கடித்துள்ளது என்பதுதான் கடந்த கால் வரலாறு.
அமெரிக்காவின் வெற்றி தற்காலிகமானதே என்று நாம் ஆறுதல் அடைய பல நியாயமான காரணங்கள் உள்ளன. அமெரிக்காவை விட மிகப் பெரிய வல்லரசுகளாகத் திகழ்ந்த பாரசிக,ரோமானிய, கிரேக்கப் பேரரசுகள் இருந்த இடம் தெரியவில்லை. சூரியனே மறையாத நாடு எங்கள் நாடு என்று ஒரு காலத்தில் பீற்றிக கொண்ட ஆங்கில சாம்ராஜ்யத்தின் இன்றைய நிலை என்ன? எனவே, இஸ்லாம் அமெரிக்கா ஏகாதிபத்தியததின் தாக்குதல்களை முறியடித்து பீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் எழும் என்பது திண்ணம்.