கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளை என்கிற பொது அமைப்பை கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள் 17.01.2010 துவக்கி வைத்தார்கள்.
விழாவில் துவக்க உரையாற்றிய கவிக்கோ “இஸ்லாமியர்களின் பிரச்சனை என்ன வென்றால்? என்ன பிரச்சனை என்பதை உணராததே அவர்களின் பிரச்சனையாக இருக்கிறது.
சிறு சிறு அமைப்புகளாக பிளவுபட்டு கிடக்கும் இந்த சமூகம் ஒன்றுபட வேண்டும். ஜக்காத் என்பதை சிறிது சிறிதாக கொடுப்பதால் அதன் நோக்கம் பூர்த்தியாகாது. ஊருக்கு ஊர் பைத்துல்மால் என்கிற பொது அமைப்பை, தர்மகூடத்தை அமைத்து அதில் வருமானம் உள்ளவர்கள் தங்களின் வருமானத்திலிருந்து இரண்டரை சதவிகிதத்தை கண்டிப்பா கொடுத்துவிட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கிடைக்கும் பணத்தை இல்லாதவருக்கு கொடுத்து மறு வருடம் அந்த நபர் ஜக்காத் கொடுக்கும் தகுதியை அடையச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதே ஜக்காத்தின் உன்னதமாக நோக்கமாகும். முறையாக அதை தொடர்ந்து செய்து வந்தாலே சமூகத்தில் ஏற்பட்டுள்ள ஏற்றதாழ்வுகள் சரிசெய்யப்படும். என்று கூறினார்.
அறக்கட்டளையின் பொதுவான நோக்கங்கள்....
- ஏழ்மை காரணமாக பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திய மாணவர்கள் மீண்டும் படிப்பினைத் தொடர வழி செய்தல்
- ஏழை மாணவர்களுக்கு உயர் கல்வி கற்க நிதி உதவி செய்தல் , வழி காட்டுதல்
- பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற பயிற்சி வகுப்புகள் நடத்துதல்
- உயர் கல்வி கற்க ஆலோசனை வழங்குதல்
- வேலை வாய்ப்பிற்கு வழி காட்டுதல்
- சிறு தொழி்ல்கள், வணிகம் செய்ய நிதி உதவி செய்தல், கடன் வழங்குதல்.
- ஏழை மக்களின் மருத்துவச் செலவிற்கு உதவி செய்தல்
- கடையநல்லூரி்ல் பெண்களுக்கான ஒரு கலைக்கல்லூரியும், பொதுவான பொறியியல் கல்லூரியும் துவக்குதல்.
திட்டங்க அனைத்து உன்னதமான நோக்கம்தான். தொடர்ந்து இவர்களின் பணிகள் சிறப்பாக நடைபெற்று பயனாளிகள் பயன் பெற்று வாழ்க்கையில் வெற்றியடைய வாழ்த்துவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக