18 செப்டம்பர், 2010

நல்லூர் முரசு

விழித்திடு தமிழா.....

     வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பல கோடி உள்ள நம் நாட்டில்...... ஒருவேளை சோற்றிற்கு கூட வழியில்லாத இந்த நாட்டில் 150 கோடிகளை கொட்டி பொழுதை போக்குவதற்காக மாபெரும் படத்தை எடுத்து விட்டதாக மார்தட்டிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம்.

    அறிவியல் வளர்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகளில் ஒன்றை நாட்டிற்கு அர்ப்பணித்த திருப்த்தியில் அந்த படத்தின் இயக்குநர். இதற்காக அவர்கள் இரண்டரை வருடங்களை செலவழித்திருக்கிறார்களாம். அதை வேறு ஏதாவது ஒரு நல்ல விசயத்திற்காக செலவழித்திருந்தால் நம் நாட்டிற்கு பெருமை சேர்ந்திருக்கும்.

   வெளிநாட்டவர்கள் சினிமாவை பொழுது போக்கிற்காக வைத்திருக்கிறார்கள். நம்மவர்கள் அதை வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே ஆக்கிவிட்டார்கள். இந்த சினிமாக்காரர்கள் தான் நம் நாட்டின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும்
முதல் சக்தியாக இருக்கிறார்கள். அந்த சக்தியை நாம்தானே அவர்களுக்கு அளித்திருக்கிறோம். 

     எந்திரன் என்கிற ஒரு சினிமாவை கோடிக்கணக்கில் பணம் போட்டு எடுக்கும் சக்தியை சன் நிறுவனம் பெற்றிருப்பதில் எந்த ஆச்சரியமும் இருப்பதாக தெரியவில்லை. அதற்காக மக்கள் மத்தியில் அவர்கள் 
கொண்டு வரும் விளம்பர யுக்திதான் பதற வைக்கிறது. எந்திரன் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சிலர் ஏதோ தமிழர்களின் 100 தலைமுறை பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டு விட்டதாகவே பேசினாரகள். அதில் ஒருவர்
எந்திரன் டிரைலரையே 100 நாட்களுக்கும் மேலாக ஓட்டி விடலாம் (ஏனென்றால் தமிழர்கள் இழித்த வாயர்கள் தானே) அதையும்
இவர்கள் விடாமல் பார்ப்பார்கள் என்கிற தீராத நம்பிக்கையில் தான் பேசியிருக்கிறார். 

    விஞ்ஞானம் வளர்ந்து நிற்கும் இந்த காலத்தில் கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம் தீபாராதனை என்று இப்படியும் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த கேவலத்தை உலகம் முழுவது பரப்பிக்கொண்டிருக்கிறது சன் தொலைக்காட்சி. 

      தமிழர்களை சினிமா மாயத்தில் முழ்கடித்து அவர்களின் சிந்தனையை சிறைவைத்து விட்டு காசு சம்பாதிக்க வேண்டும் என்கிற வெறியில் 
கடை விரித்திருக்கிறார்கள் இந்த பணக்கார முதலாளி வர்க்கம்.  இந்த ஆதிக்க வர்க்கத்தின் பிடியில் சிக்கி சீரளிந்து கொண்டிருக்கும் நம் 
இளைஞர்கள் என்று விழிக்கப்போகிறார்களோ........? 

விழித்திடு தமிழா ..... விழித்திரு...... 

9 செப்டம்பர், 2010

2019 டிசம்பர்