16 ஜனவரி, 2010

நாமும் சினிமா விற்பனர்கள் தான்

        சினிமா விமர்சனத்த வலை பகுதில எழுதுறது தப்பா? அப்டினு கேக்றதவிட தேவை?யான்னுதான் கேக்கணு. சினிமாவ பத்தி நாம ஏங்க எழுதனு... அதற்பரப்புறதுக்குதா எல்லா தொலைக்காட்சி அலைவரிசைகளும் போட்டிபோட்டுக்குட்டு இருக்க...., பத்தாதுக்கு சில சேனல்களு சொந்தமா சினிமா தயாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.  அவங்க ஒளிபரப்புற நிகழ்சிகள்ல அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தடவ விளம்பரம் பண்ணி அறுத்துக்குட்டு தான இருக்காங்க. எப்டி பாத்தாலும் எத்தன படங்க நல்லதா பாக்குறாப்ல இருக்கு நூத்துல ஒண்ணுரெண்டு தேறு. சன் நெட்வொர்க் வெளியிட்டிருக்குற படங்க சறியா போகுதோ இல்லையோ வியாபாரத்த எப்படி செய்யணும்ணு சரியா தெரிஞ்சவங்க.  ஒருபக்க ஊடகங்கள் மூலமா பண்றாங்க சரியா போகல கொஞ்ச மந்தமா இருக்குண்ணு வெச்சுக்கங்க, படத்துல நடுச்சவங்கள ரசிகர்கள் முன்னாடி நிறுத்தி (இந்த மக்கள் எவ்வளவு முட்டாள்களுன்னு தெரிஞ்சுகிட்டு) கொஞ்ச கூட்டத்த கூட்டக்கூடிய (புத்திசாலித்தனமான) யோசனய செஞ்சுக்கிட்டு இருக்கு.
       யாரோ காசுபோட்டு எடுக்குறாங்க, யாரோ நடிக்கிறாங்க, யாரோ வாங்குராங்க எடைல நாம யாருங்க அத விளம்பரம் பண்றதுக்கு?  உலகத்துல வேற பிரச்சனையே இல்லியா?
      நடிச்சவங்களுக்கு கிடைக்க வேண்டிய வருமான அளவுக்கு அதிகமா கிடைக்கும்,  புகழ் சொல்லவே வேண்டா (பத்தாதுக்கு நாமளு சேந்து பரப்புரதால) ஏறிக்கிட்டே போவுது. கடைசில நமக்கு என்னங்க கிடைக்கு?...
               இந்தியாவ தவிற மற்ற நாடுகள்ல இது இல்லியான்னு? கேக்க தோணு.  இருக்கு அவங்கள்லா சினிமாவ பொழுது போக்குக்குதா வெச்சுருக்காங்க. இந்தியாவுல மட்டுதா வாழ்க்கையோட இணைச்சு வாழ்ந்துகிட்டே இருக்காங்க. சினிமாவுல காமிக்குறது எல்லா உண்மையான வாழ்க்கையோட ஒப்பிட க்கூடியவங்கதா இங்க நிறையப்பேரு இருக்காங்க. 
        சினிமாவே பாக்கக்கூடாதுன்னு சொல்லலங்க., சினிமா மட்டுமில்லங்க எல்ல பொழுது போக்கு விஷயங்களையு அனுபவிக்கணு. சினிமா பாத்துட்டு வெளியில வந்ததோட சினிமா தியேட்டரோட விட்டுடணுங்க வெளியில என்ன விமர்சன வேண்டி கிடக்கு.
    சினிமா எதங்க பரப்புது... நாகரீகச் சீரழிவுகளின் அறங்கேற்றம், வன்முறைகலாச்சாரம், கொடூரம், தீவிரவாதத்தை பயிற்றுவிக்கும் துவக்கப்பள்ளி.
     நல்ல கலாச்சார அம்சங்கள் உள்ள படங்க வரட்டு. பாக்கலா, ரசிக்கலா,(ரசிக்கறதோட விட்டுடனு)  சினிமா மாறாதுங்க.  நாமதாங்க மாறாம இருக்கணு. மனித நேயத்தோட, சகோதர எண்ணங்களோட மனுசனா...... இருக்கணு.

கருத்துகள் இல்லை:

2019 டிசம்பர்