26 ஜனவரி, 2010

எங்கள் ஊருக்கு ஏற்பட்ட சாபக்கேடு....

      கடந்த ஒரு மாத காலமாக புதுவித மான வைரஸ் காய்ச்சலால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 26இந்த 26ல் வயது வித்தியாசமே கிடையாது குழந்தைகள் முதல் நடுத்த வயது முதியவர்கள் வரை அடங்கும். ஆனால் அரசு தரப்பில் கூறப்படுவது என்ன வென்றால் இது சாதரண வைரஸ் காய்ச்சல் தான்.மரணச்சம்பவம் வைரஸ் காய்ச்சலினால் ஏற்பட்டதல்ல என்று கூறுகிறது. அப்படி என்றால் இந்த மரணத்திற்கு என்ன காரணம் இருக்க முடியும். மருத்துவர்கள் ஒருசிலர் கருத்து இந்த வைரஸ் காய்ச்சல் தென் ஆப்பிரிக்காவிலிருந்து சவுதி அரேபியாவிற்கும் பின் சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கும் பரப்பப்பட்டதாக கருத்து கூறுகிறார்கள். 15நாட்களுக்கு முன்பாக இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துச்சென்றது என்னவானது? எல்லாம் குப்பைத்தொட்டிக்கு சென்று விட்டதோ என்று அஞ்சத்தோன்றுகிறது. இது வரை எந்த முடிவும் சொல்லாமல் மௌனம் சாதிக்கிறது சுகாதாரத் துறை. மனித உயிர்கள் என்ன அவ்வளவு சாதரணமாகிவிட்டதா?.  கொசுமருந்து அடித்த வகைக்கு 35இலட்சம் செலவாகிவிட்டதாக கணக்கு காண்பிக்கிறது நகராட்சி நிர்வாகம்.
     வீட்டிற்கு ஒருவர் அல்லது இருவர் இந்த காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு என்னதான் முடிவு?
    இந்தச் சூழலில் நாளை 27.01.2010 நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்திருக்கிறது.
       யாருக்காக யார் பயப்படுகிறார்கள் என்றுதான் தெரியவி்ல்லை. இதனால் இவர்களுக்கு என்ன இலாபம் கிடைக்கப்போகிறது.

கருத்துகள் இல்லை:

2019 டிசம்பர்