4 ஜனவரி, 2010

சீரழிக்கும் சின்னத்திரை நாடகங்கள்......

சமீப காலங்களாக சின்னத்திரையின் வளர்ச்சி மனித சிந்தனையை ஒரு நேர்பார்வையில் சிறைவைக்கும் சிறை என்று சொன்னால் அது மிகையாகாது.

விஞ்ஞான வளர்ச்சி மனித அறிவிற்கு தீணியாக அமைந்தாலும், மறுபுறம் சீரழிவையும் வளர்க்கிறது என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

குறிப்பாக...
அதில் வரும் நாடகங்கள் மனித வாழ்க்கையின் மரபை மீறிய ஒரு செயல்களைத்தான் கற்பிக்கிறது.

சூழ்ச்சியால் பெரிவர்களை சிறியவர்கள் வெல்வது எப்படி என்பதை கற்றுக்கொடுக்கிறது. குடும்பப் பெண் வேறொரு ஆண்மகனோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது சாமர்த்தியமான ஒன்றாக சிந்தனை ஓட்டத்தில் ஓட விடும் சின்னத்திரை இயக்குநர்கள் மனிதாபிமானங்களையும், மனித நேயத்தையும் போதிக்கத்தக்க ஒரு தொடரை இந்த மக்களுக்கு தரலாம். என்று அவர்களுக்கு யோசை சொல்லிக் கொண்டிருக்காமல் நாம் தான் அவ்வகை கதைகளை தாங்கி வரும் நாடகங்களை பார்க்காமல் தவிற்க வேண்டும் .

கருத்துகள் இல்லை:

2019 டிசம்பர்