15 ஜனவரி, 2010

கமல் ஒரு மகாநடிகர் தான்


          ஜக்குபாய் திருட்டு விசிடி வெளியான விஷயத்தில் நடிகர்கள் கூட்டாய் முதல்வரை சந்தித்து வேண்டுகோள் விடுக்க..... முதல்வரும் அதற்கான நடவடிக்கையில் இறங்கி உடனடியா தடுத்து விட்டதாக சந்தோசப்பட்டுக்கொண்ட நடிகர்கள் கூட்டம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஒவ்வொரு நடிகர்களாக தத்தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
     அது அனைத்தும் நகைப்புக்குறியதுதான்.   முன்பு ஒரு சமயத்தில் இதுபோன்ற விடையத்திற்கு(அதாவது திருட்டு விசிடி பற்றி) நடிகர் கமல் கூறும் போது “என்னதான் அதற்கான தடுப்பு முயற்சியில் ஈடுபட்டாலும் திருட்டு விசிடி வந்து கொண்டுதான் இருக்கும். சினிமா எடுக்கும் விதத்தில் புதுமையை கொண்டு வருவதன் மூலம் ரசிகர்களை தியேட்டருக்கு வர வைக்க முடியும். ஆகவே தடுப்பு முயற்சி ஒரு பக்கம் நடந்தாலும் புதுமைதான் ஜெயிக்கும்” என வாதிட்டார்.
         ஆனால் தற்போது என்ன கூறினார்.  திருட்டு விசிடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பகுதியானவர்கள் முஸ்லிம்கள் என்பதை மறைமுகமாக கூறிவி்ட்டு அவ்வாறு அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை தீவிரவாதத்திற்கு பயன்படுத்துகிறார்கள். இது ஒருவகையில் தீவிரவாதத்திற்கும் பயன்படுகிறது.  ஆகவே திருட்டு விசிடியை ஆதரிக்கக்கூடாது என்று கூறியுள்ளார். இந்த மகா நடிகர்.  திரையில் தான் பல அவதாரங்கள் எடுக்கும் இவர்இயல்பு வாழ்க்கையிலும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
       கடவுளை இல்லை என்று கூறுவார், பின்பு இல்லை என்று கூறவில்லை இருந்தால் நல்லா இருக்குமே என்றும் கூறுவார். முஸ்லிம்களை தீவிர வாதிகளாக காட்டுவதில் இவர் எடுத்துக்கொண்ட புதிய யுக்திகள்தான் சமீபத்திய உன்னைப்போல் ஒருவன் .
     ஒட்டு மொத்த ஊடகங்கள் அனைத்தும் வரிந்து கட்டிக்கொண்டு முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டுவதில் ஒருமித்த கருத்துக்களோடு உலா வந்து கொண்டிக்கி்ன்றன.
     எந்த மதங்களும், தீவிர வாதத்தை ஆதரிக்க வில்லை.  மாறாக வேலைவெட்டி இல்லத சில விசமிகள் செய்யும் செயல்களால் அப்பாவி மக்கள் தான் அவதிப்படுகிறார்கள். இதைக்கூடவா புரிந்து கொள்ள முடிய வில்லை இந்த மகா நடிகனுக்கு.
   ஒரு முஸ்லிம் கர்பிணி பெண் நடுரோட்டில் படு கொடுரமாக கொல்லப்பட்ட சம்பவத்தை சொல்லி நல்லபெயர் எடுக்கமுயற்சித்தது என்னவோ போலிவேஷம்தான். படத்தின் முக்கிய கருவே முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டு வேண்டும் என்பதுதான்.
      எதிர்கால சந்ததிகள் சினிமாபார்த்து வளர்ந்த பலகீனமான கூட்டமாகத்தான் இருக்கும். என்ற இவரின் வசனம் நிச்சயம் வெல்லக்கூடாது. சினிமா என்கிற ஒரு மாய வலையிலிருந்து நம் இளைஞர்கள் மீழ வேண்டும். அப்பொழுதுதான் மனிதம் வெல்லும்

கருத்துகள் இல்லை:

2019 டிசம்பர்