16 டிசம்பர், 2009


கீழ்வரும் கவிதைகள் அனைத்தும் 
படித்ததில் பிடித்தது........
பிழை நிறைந்த கவிதை


நிச்சயம் நம்புகிறேன்
வாசிக்கப் படும்
என் கவிதையில்
பிழைகள் அதிகம்!


என் காயங்களால்
தொலைந்தது
வாழ்க்கை மட்டுமல்ல
அவன்சொன்ன வழியும்!


சிபாரிசை மறுக்கும் அவன்முன் 
ஒரு வேண்டுகோள்
பகிரங்கமாக வாசிக்க வேண்டாம்
என் கவிதையை!


ஏமாற்றம்.....


பிரிவின் விசாலம்
மரணச் சித்ரவதையாய் என்னுள்


அழகிய நட்பின்
இறுக்கம் காண
வாழ்க்கை திரும்பவே இல்லை!


கண்ணீர்த் துளியாடையைக்
கட்டாத் நாளில்லை
என் கண்கள்


நம்பிக்கை துரோகம்
செய்திராவிட்டால்
அவள் முகம் இன்றும்
நிலா!
என் தாய்....


வேதனையை விழுங்கி
தன் உடம்பை வேகவைத்தவள்
என் தாய்!


மலை இருந்து இறங்கும்
அருவியைப் போல்
என்தாயின் கண்களிலும்


அவளின் உசுப்புதலை
உதாசீனம் செய்த பாவி
நான் தான்!


முதுமையிலும் என்னத்
தூக்கிச் சுமக்கும்
அதிசயத்தாய்!


இறைவா
தாயைச்சுமக்கும்
பாக்கியத்தை மட்டும் தா!

கருத்துகள் இல்லை:

2019 டிசம்பர்